HR SITUATION SLPUBLICATIONSRepression of Dissent

Repression of Dissent in Sri Lanka, October 2023

0

Click here to download the full report in English

සිංහල පරිවර්තනය පහතින් ඇත.

தமிழ் மொழிபெயர்ப்பு கீழே உள்ளது.

Summary

Context: Staff level agreement on the first review of the IMF support to Sri Lanka which expects to provide USD 330 million credit facility was reached, and will be sent for the approval of IMF Management and Executive Board. As President Wickramasinghe met with the Chinese President Xi Jinping during an official visit to China, Xi Jinping assured that China will assist Sri Lanka to achieve economic stability. Appointing a new Inspector General of Police (IGP) was further delayed and the current IGP who had been scheduled to be retired in last March, was granted repeated service extensions, as all the major candidates for the position are facing accusations and pending legal cases in relation to the negligence of their duty in the case of Easter Sunday Bomb Attack in 2019 and other violations. A third service extension to the existing Inspector General of Police (IGP) was granted by the President, while the Parliament Constitutional Council declined to approve the decision. A custodial death from Colombo District and two extrajudicial killings from Colombo and Galle districts were reported this month. No legal action was taken against a Buddhist monk who made hate speech comments advocating for the murder of Tamils in the South of the country. The Parliament’s Sectoral Oversight Committee on National Security has recommended informing the US Ambassador Julie Chung, to refrain from making statements regarding the internal affairs of Sri Lanka in the future.

Case Updates: Two proposed repressive laws Anti-Terrorism Act (ATA) and Online Safety Bill were gazetted in mid-September.[1] Challenging the constitutionality of the Online Safety Bill, a total of 46 Special Determination petitions by lawyers, political parties, artists, civil society activists and others were filed before the Supreme Court.[2] INFORM also filed a petition against the online safety bill. Court held that the bill can be passed with a simple majority in the parliament, subject to amendments made to 31 of its provisions. At least two petitions by two opposition political parties were filed against the Anti-Terrorism Act (ATA). The Supreme Court decided not to take up the petitions filed on ATA as the Bill has not yet been presented before the Parliament.[3] Memorial events were held remembering the 23rd anniversary of the murder of Tamil journalist, Mylvaganam Nimalarajan. Activist Sandya Ekneligoda held a memorial exhibition remembering 5000 days of her struggle seeking justice for her disappeared husband Journalist Prageeth Ekneligoda.[4] The 36th anniversary of the Kokkuvil Pirambadi massacre that killed over fifty Tamil civilians by Indian Peacekeeping Forces (IPKF) in 1987, was also commemorated in Jaffna. All these cases still remain in impunity. It was also reported that the excavations of Mullaitivu mass grave would not begin soon, due to lack of state funding.[5]  Retired Police officer Shani Abeysekara sent a letter of demand requesting compensation from senior police officers responsible for his wrongful arrest and detention. The Fundamental Rights petition filed by Writer Shakthika Sathkumara who was wrongfully arrested and detained for 120 days and subsequently faced a legal case has been fixed for arguments on 7th June, next year.   The Bribery Commission informed the Colombo Fort Magistrate’s Court that it will not take further legal action into the sum of Rs. 17.85 million cash recovered from the President’s House during anti-government protests, due to lack of evidence. Colombo Fort Magistrate ordered to quash a case that was filed against Former Governor of the Central Bank Ajith Nivard Cabraal, and Former President’s Secretary Lalith Weeratunga over misappropriation of US$ 6.5 million in public funds, on the basis that there is insufficient evidence.[6] In a divided decision, the Court of Appeal dismissed the case regarding MP, Diana Gamage’s citizenship that had been filed alleging that she is not eligible for the member of parliament position due to her alleged dual citizenship.[7]

Click here to download the full report in English

Repression of Media and Journalists: An international photojournalist was refused entry to the Iranai Theevu Island by the Sri lankan military.  Four journalists including the head of the news section at Neth FM had been summoned and questioned by the Parliamentary Privilege Committee, over a complaint made by a government Minister. Management of the State-owned press company Associated Newspapers of Ceylon Limited (ANCL) launched a disciplinary inquiry against an editor of one of its main daily newspapers, for quoting a statement made by the Opposition leader criticising the President.[8] Two Tamil journalists in Batticaloa were questioned by the Police for over 2 hours, in relation to their reporting on Police violence occurred while dispersing a protest organised by cattle farmers.  

Tweet by the Photojournalist denied entry to the Iranai Theevu Island in the Northern Province. Photo Courtesy: Elke Scholiers

Repression of Freedom of Assembly:  Police officers photographed a protest organised by the lawyers in the Northern Province, demanding an inquiry into alleged threats faced by Mullaitivu District Court Judge T Savaranarajah. Police dispersed a protest by cattle farmers, by physically assaulting them. An injunction order was issued against the group of dairy farmers in Batticaloa who have been protesting for 24 consecutive days against the land encroachments by others into their traditional grazing lands. A group of Tamil families from nearby District Ampara who were planning to join the protest in solidarity were stopped in Batticaloa and questioned for around 3 hours, in order to prevent them from joining the protest.   Trincomalee magistrate court issued an injunction order against eight persons who organised a protest against the construction of the new Buddhist temple in the area. Police fired tear gas at a protest held in Colombo, by several teacher’s trade unions, and two other protests organised by university students in Kandy and Colombo. 

Using disproportionate force, on 8th October, Police dispersed the protest organised by cattle farmers and other activists in Batticaloa. Courtesy: Tamil Guardian

Repressive Legal and Policy Actions: The monthly gazette notification was issued calling for the Armed Forces, by the President, indicating continuing militarization in the country. Another gazette notification was issued declaring supply of petroleum, and electricity as essential services, while such declarations have been often used to prevent trade union actions. The Parliamentary Sectoral Oversight Committee on National Security submitted a letter to the State Minister of Defence and spoke to the media condemning the Human Rights Commission of Sri Lanka for recommending legal actions against Police officers who shot at the protesters in Rambukkana in Sabaragamuwa Province in April 2022, during Sri Lanka’s peoples’ protests. 

Repression of state officials: Former Chairperson of Public Utilities Commission Janaka Ratnayake who was sacked from his position in May 2023, after disagreeing with the government on several issues including refusal to approve increase of public utility bills received a phone call threatening him with death, and demanding extortion.

Click here to download the full report in English.

ශ්‍රී ලංකාවේ විසම්මුතිය මර්දනය, 2023 ඔක්තෝබර්

සම්පූර්ණ වාර්තාව ඉංග්‍රීසියෙන් බාගත කිරීමට මෙහි ක්ලික් කරන්න.

සාරාංශය

සන්දර්භය: ශ්‍රී ලංකාවට ලබා දීමට අපේක්ෂා කරන එ.ජ.ඩොලර් දශ ලක්ෂ 300ක ණය මුදලේ පළමු සමාලෝචනය පිළිබඳ කාර්ය මණ්ඩල එකඟතාවය ඇති කර ගත් අතර එය අනුමැතිය සඳහා අරමුදලේ කළමනාකරණ සහ විධායක මණ්ඩලයට ඉදිරිපත් කිරීමට නියමිතය. ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ තම නිල චීන සංචාරයේ දී චීන ජනාධිපති සී ජින්පින් හමු වූ අතර ශ්‍රී ලංකාවේ ආර්ථික ස්ථායිකරණයට චීනයේ සහාය දිගටම ලබා දීමට චීන ජනාධිපති සහතික වූයේය. පසුගිය මාර්තු මස විශ්‍රාම ගැනීමට නියමිතව සිටි දැනට සිටින පොලිස්පති වෙනුවට නව පොලිස්පතිවරයෙකු පත් කිරීමට නොහැකි වූ නිසා ඔහුට තවත් සේවා දිගුවක් ලබා දී ඇත. එම තනතුර අපේක්ෂාවෙන් සිටින ප්‍රධාන අපේක්ෂකයන් සියලු දෙනාටම පාහේ චෝදනා එල්ල වී ඇති අතර 2019 පාස්කු ඉරිදා බෝම්බ ප්‍රහාරය සම්බන්ධයෙන් තම රාජකාරි ඉටු නොකිරීම සම්බන්ධයෙන් ද ‍සහ වෙනත් උල්ලංඝනය කිරීම් පිළිබඳව ද චෝදනා ඉදිරිපත්ව ඇත. එහෙත් පාර්ලිමේන්තුවේ ව්‍යවස්ථාදායක සභාව මෙම සේවා දිගුව අනුමත කර නැත. මෙම මාසයේ දී කොළඹ දිස්ත්‍රික්කයෙන් අත් අඩංගුවේ සිට මිය යෑම් දෙකක් සහ නීතියෙන් පරිබාහිර මරණ දෙකක් කොළඹ සහ ගාලු දිස්ත්‍රික්කවලින් වාර්තා විය. රටේ දකුණේ සිටින දෙමළ ජනතාව මරා දැමිය යුතුයැයි තම වෛරී ප්‍රකාශයකදී සඳහන් කළ ‍බෞද්ධ භික්ෂුවක ට එරෙහිව නීතිමය පියවරක් ගෙන නැත. ඉදිරියේ දී ශ්‍රී ලංකාවේ අභ්‍යන්තර කටයුතු පිළිබඳව ප්‍රකාශ කිරීමෙන් වැළකී සිටින ලෙස පාර්ලිමේන්තුවේ ජාතික ආරක්ෂාව පිළිබඳ අංශීය අධීක්ෂණ කොමිටිය එක්සත් ජනපද තානාපති ජුලි චාන්ග්ට දැනුම් දීමට නිර්දේශ කෙළේය. 

නඩු යාවත්කාලීන කිරීම්: යෝජිත මර්දනකාරී පනත් දෙකක්, ප්‍රතිත්‍රස්ත පනත සහ මාර්ග ගත ආරක්ෂාව පිළිබඳ පනත සැප්තැම්බර් මස මැද භාගයේ දී ගැසට් කරන ලදී. මාර්ග ගත ආරක්ෂාව පිළිබ‍ඳ පනතේ ව්‍යවස්ථානුකුල භාවය අභියෝගයට ලක් කරමින් නීතිඥයන්, දේශපාලන පක්ෂ, කලාකරුවන්, සිවිල් සමාජ ක්‍රියාකාරීන් සහ තවත් අය විශේෂ තිරණ ලබා ගැනීමේ පෙත්සම් 46ක් ශ්‍රේෂ්ඨාධිකරණය ඉදිරියේ ගොණු කරන ලදී.  ඉන්පෝර්ම් ආයතනය ද මාර්ග ගත ආරක්ෂාව පිළිබඳ පනතට එරෙහිව පෙත්සමක් ගොණු කෙළේය.  පනතේ වගන්ති 31 ක් සංශෝධනය කිරීමෙන් එය පාර්ලිමේන්තුවේ සාමාන්‍ය බහුතරයකින් සම්මත කළ හැකියැයි අධිකරණයෙන් තීරණය කර ඇත. විපක්ෂයේ දේශපාලන පක්ෂ දෙකක් අඩුම වශයෙන් පෙත්සම් දෙකක් ප්‍රති ත්‍රස්ත පනත අභියෝගයට ලක් කරමින් අධිකරණයේ ගොණු කර ඇත. ප්‍රති ත්‍රස්ත පනත පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කර නැති නිසා ශ්‍රේෂ්ඨාධිකරණය එම පෙත්සම් විභගයට නොගැනීමට තීරණය කෙළේය. දෙමළ ජනමාධ්‍යෙව්දියෙකුව සිටි මයිල්වාගනම් නිමලරාජන් ඝාතනය කිරීමේ 23 වැනි සංවත්සරය වෙනුවෙන් අනුස්මරණ උත්සව පවත්වන ලදී. ක්‍රියාකාරිණි සන්ධ්‍ය එක්නැලිගොඩ ඇගේ සැමියා, ජනමාධ්‍යවේදී ප්‍රගීත් එක්නැලිගොඩ අතුරුදහන් කොට දින 5000ක් ගතවීම නිමිත්තෙන් යුක්තිය ලබා ගැනීමට ඇය ගෙන ගිය අරගලය අනුස්මරණය කිරීමට ප්‍රදර්ශනයක් පවත්වන ලදී. ඉන්දියානු සාම සාධක හමුදාව විසින් 1987 කොකුවිල් පිරම්බඩී හි  දෙමළ සිවිල් වැසියන් පනහකට අධික ප්‍රමාණයක් ඝාතනය කිරීමේ 36 වැනි සංවත්සරය යාපනයේ දී පවත්වන ලදී. මෙම සිද්ධීන් සියල්ලටම තවමක් මුක්තියක් පවතී. රජයෙන් අරමුදල් නොලැබීම නිසා මුලතිවු හි සමූහ මිනී වලේ කැනීම් කටයුතු ඉක්මණින් නැවත ආරම්භ නොවන බව වාර්තා විය. තමා වැරදි ලෙස අත් අඩංගුවට ගෙන රඳවා ගැනීම සම්බන්ධයෙන් වගකිව යුතු පොලිස් නිලධාරීන්ගෙන් වන්දි ඉල්ලමින් විශ්‍රාමික පොලිස් නිලධාරි ෂානි අබේසේකර එන්තරවාසියක් යවා ඇත. තමා වැරදි ආකාරයට අත් අඩංගුවට ගෙන දින 120ක් රඳවා ගෙන සිට පසුව නඩුවක් පවරන ලද ලේඛක සක්තික සත්කුමාර ඉදිරිපත් කළ මූලික අයිතිවසිකම් පෙත්සම ලබන වසරේ ජුනි 7 දින විභාගයට ගැනීමට දින නියම කර ඇත. ආණ්ඩුවට එරෙහිව පැවති විරෝධතාවයේ දී ජනාධිපති නිල නිවසේ තිබී සොයා ගත් රැ. දශ ලක්ෂ 17.85ක මුදල සම්බන්ධයෙන් සාක්ෂි නොමැති නිසා වැඩි දුරටත් නීති පියවර නොගන්නා බව අල්ලස් කොමිසම කොළඹ කොටුව මහෙස්ත්‍රාත්වරයාට දැනුම් දුන්නේය. ප්‍රමාණවත් සාක්ෂි නොමැති නිසා එ.ජ. ඩොලර් දශ ලක්ෂ 6.5ක මහජන මුදලක් අයථා පරිහරණය කිරීම පිළිබඳව ශ්‍රී ලංකා මහ බැංකුවේ අධිපති අජිත් නිවාඩ් කබ්බ්‍රාල් සහ හිටපු ජනාධිපති ලේකම් ලලිත් වීරතුංගට එරෙහිව ගොණු කර තිබු නඩුව කොළඹ කොටුව මහෙස්ත්‍රාත් ඉවත දැමුවේය. ද්විත්ව පුරවැසියෙකුවීම නිසා පාර්ලිමේන්තු මංත්‍රී තනතුරක් දැරීමට සුදුසුකම් නැතැයි චෝදනා කරමින් පාර්ලිමේන්තු මංත්‍රී ඩයනා ගමගේට එරෙහිව පවරා තිබු නඩුව අභියාචනා අධිකරණයේ බෙදුනු නඩු තීන්දුවකින් නිෂ්ප්‍රභ විය.

සම්පූර්ණ වාර්තාව ඉංග්‍රීසියෙන් බාගත කිරීමට මෙහි ක්ලික් කරන්න.

මාධ්‍ය සහ ජනමාධ්‍යවේදීන් මර්දනය: අන්තර්ජාතික ඡායාරූප ජනමාධ්‍යවේදියෙකුට ඉරනායි තිවු දූපතට ඇතුලුවීම ශ්‍රී ලංකා හමුදාව විසින් වළක්වන ලදී. නෙත් FM ආයතනයේ ප්‍රවෘත්ති අංශයේ ප්‍රධානි ඇතුළත් ජනමාධ්‍යවේදීන් හතර දෙනකු ආණ්ඩුවේ ඇමතිවරයෙකු ගේ පැමිණිල්ලක් අනුව පාර්ලිමේන්තු වරප්‍රසාද කොමිටිය ඉදිරියට කැඳවා ප්‍රශ්න කරන ලදී. රජය සතු පුවත් පත් සමාගමක් වන එක්සත් ප්‍රවාත්ති පත්‍ර සමාගමේ කළමනාකාරිත්වය ජනාධිපති විවේචනය කරමින් විපක්ෂ නායක විසින් කරන ලද ප්‍රකාශයක් උපුටා දැක්වීම සම්බන්ධයෙන් එම සමාගමේ ප්‍රධාන දෛනික පුවත් පතේ කතුවරයා ට එරෙහිව විනය පරීක්ෂණයක් පැවැත්වීමට එහි කළමනාකාරිත්වය ආරම්භ කර ඇත. කිරි ගොවීන් සංවිධානය කළ විරෝධතාවයක් විසුරුවා හැරීමේ දී පොලිස් ප්‍රචණ්ඩත්වය යොදා ගැනීම වාර්තා කළ මඩකලපුවේ දෙමළ ජනමාධ්‍යවේදීන් දෙදෙනෙකු පොලිසියට කැඳවා එම වාර්තා කිරීම ගැන පැය දෙකකට අධික කාලයක් ප්‍රශ්න කර ඇත.

උතුරු පළාතේ ඉරනෙයිතිවු දූපතට පිවිමෙන් වැළැක් වූ ඡායාරූප ජනමාධ්‍ය‍වේදියාගේ ට්විටර් සටහන, ඡායාරූප අනුග්‍රහය එල්කි ස්කොලියර්ස්

රැස්වීමේ නිදහස මර්දනය: මුලතිවු දිස්ත්‍රික විනිසුරු ටී සවරනරාජා මුහුණ දී ඇතැයි කියන තර්ජනය සම්බන්ධයෙන් පරීක්ෂණයක් පවත්වන ලෙස ඉල්ලා උතුරු පළාතේ නිතිඥයින් සංවිධානය කළ විරෝධතා ව්‍යාපාරයක් පොලීසිය විසින් ඡායාරූප ගත කර ඇත. පොලීසිය විසින් කිරි ගොවීන් ගේ විරෝධතාවය ඔවුන්ට පහර දී විසිරුවා හරින ලදී.  තම සාම්ප්‍රදායික තණබිම් පිටස්තර අය අත්පත් කර ගැනීමට එරෙහිව දින 24ක් නොකඩවා විරෝධතාවය දැක් වූ කිරි ගොවීන් ගේ කණ්ඩායමකට එරෙහිව තහනම් නියෝගයක් ඉදිරිපත් කර ඇත. විරෝධතාවයට සහයෝගය දැක්විමට යාබද අම්පාර දිස්ත්‍රික්කයන් පැමිණි දෙමළ පවුල් කණ්ඩායමක් මඩකලපුවේ දී නතර කොට ඔවුන් විරෝධතාවයට එක්වීම වැළැක්වීමට පැය තුනක පමණ කාලයක් තිස්සේ ප්‍රශ්න කරන ලදී. ත්‍රිකුණාමලය මහෙස්ත්‍රාත් අධිකරණය ප්‍රදේශයේ අලුතින් බෞද්ධ පන්සලක් ඉදි කිරීමට විරෝධතාවයක් දැක්වූ පුද්ගලයන් අට දෙනෙකුට එරෙහිව තහනම් නියෝගයක් නිකුත් කර ඇත. ගුරු සංගම් කීපයක් කොළඹ පැවැත් වූ විරෝධතාවයකට සහ විශ්ව විද්‍යාල ශිෂ්‍යයන් මහනුවර සහ කොළඹ පැවැත් වූ විරෝධතාවලට පොලීසියෙන් කඳුලු ගෑස් ප්‍රහාරයක් එල්ල කරන ලදී.  

ඔක්තෝබර් 8 වැනිදා කිරි ගොවීන් සහ මඩකලපුවේ වෙනත් ක්‍රියාකාරීන් සංවිධානය කළ විරෝධතාවයක් විසිරුවා හැරීමට පොලීසිය අසීමිත බලයක් යෙද වූයේය.  අනුග්‍රහය ටැමිල් ගාර්ඩියන්

මර්දනකාරී නීති සහ ප්‍රතිපත්ති පියවර: රට හමුදාකරණයට ලක් කිරීම ප්‍රදර්ශනය කරමින් ජනාධිපති සන්නද්ධ හමුදා කැඳවීමේ මාසික ගැසට් නිවේදනය නැවතත් නිකුත් කෙළේය. පැට්‍රෝලියම් සහ විදුලිය සැපයීම අත්‍යවශ්‍ය සේවා බවට ප්‍රකාශ කෙරෙන තවත් ගැසට් නිවේදනයක් ද නිකුත් කර ඇත. වෘත්තීය සමිති පියවර වැළැක්වීමට එවැනි ප්‍රකාශන බොහෝ විට යොදා ගනී. පාර්ලිමේන්තුවේ ජාතික ආරක්ෂාව පිළිබඳ අංශීය අධීක්ෂණ කොමිටිය ආරක්ෂක නියෝජ්‍ය ඇමතිට ලිපියක් භාර දී 2022 අප්‍රේල් මස පැවති ජනතා විරෝධතාවලදී සබරගමුව පළාතේ රඹුක්කන දී විරෝධතාකරුවන්ට වෙඩි තැබු පොලිස් නිලධාරීන්ට එරෙහිව නඩු පැවරීමට නිර්දේශ කිරීම හෙළා දකින නිවේදනයක් මාධ්‍යයට නිකුත් කෙළේය.

රාජ්‍ය නිලධාරීන් මර්දනය: මහජන උපයෝගිතා බිල්පත් මිල වැඩි කිරීම අනුමත කිරීම ප්‍රතික්ෂේප කිරීම ඇතුළත් කරුනු ගණනාවක් පිළිබඳව ආණ්ඩුව සමග එකඟ නොවීම නිසා 2023 මැයි මස මහජන උපයෝගිතා කොමිසමේ සභාපති ජනක රත්නායක එම තනතුරෙන් ඉවත් කිරීමෙන් පසුව දුරකතනයකින් මරණ තර්ජන එල්ල කොට ඔහුගෙන් කප්පම් මුදල් ඉල්ලා ඇත.

  

සම්පූර්ණ වාර්තාව ඉංග්‍රීසියෙන් බාගත කිරීමට මෙහි ක්ලික් කරන්න.

இலங்கையில் கருத்து வேறுபாடுகளை அடக்குதல், ஒக்ரோபர் 2023

முழு அறிக்கையையும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

சாராம்சம்3

சூழமைவு: 330 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை வழங்க எதிர்பார்க்கும் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவின் முதலாவது மீளாய்வு தொடர்பான பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ மற்றும் நிறைவேற்றுச் சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்க சந்தித்த வேளையில், பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கு இலங்கைக்கு சீனா உதவும் என ஷி ஜின்பிங் உறுதியளித்தார். புதிய பொலிஸ் மா அதிபரின் (IGP) நியமனம் மேலும் தாமதமானதுடன், கடந்த மார்ச்சில் ஓய்வு பெறவிருந்த தற்போதைய IGPக்கு மீண்டும் மீண்டும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டது. ஏனெனில் அந்த பதவிக்கு அனைத்து முக்கிய வேட்பாளர்களும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதுடன், 2019இல் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் பிற விதிமீறல்கள் தொடர்பாக அவர்கள் கடமையை அலட்சியம் செய்தது தொடர்பில் சட்ட வழக்கு விசாரணைக்கும்  உள்ளாகியுள்ளனர். தற்போதுள்ள பொலிஸ் மா அதிபருக்கு (IGP) மூன்றாவது சேவை நீடிப்பு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அதேவேளை, தீர்மானத்தைப் பாராளுமன்ற அரசியலமைப்புச் சபை அங்கீகரிக்க மறுத்துவிட்டது. இந்த மாதம் கொழும்பு மாவட்டத்தில் காவலில் வைக்கப்பட்ட ஒரு மரணமும், கொழும்பு மற்றும் காலி மாவட்டங்களில் இருந்து நீதிக்கு புறம்பான இரு கொலைகளும் பதிவாகியுள்ளன. நாட்டின் தெற்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு ஆதரவாக வெறுப்பூட்டும் கருத்துக்களை வெளியிட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எதிர்காலத்தில் இலங்கையின் உள்விவகாரங்கள் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்குத் தெரிவிக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் கண்காணிப்புக் குழு பரிந்துரைத்துள்ளது.

விடயப் புதுப்பிப்புகள்: இரண்டு முன்மொழியப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) மற்றும் ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலம் ஆகியவை செப்ரெம்பர் நடுப்பகுதியில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டன. ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தின் அரசியலமைப்புத்தன்மையை எதிர்த்து, வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள், கலைஞர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஏனையோரால் மொத்தம் 46 விசேட நிர்ணய மனுக்கள் மீஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலத்திற்கு எதிராக INFORM ஒரு மனுவையும் தாக்கல் செய்தது. அதன் ஏற்பாடுகளின் 31க்கு செய்யப்பட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு, நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு (ATA) எதிராக இரு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளால் குறைந்தபட்சம் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சட்டமூலம் இன்னும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததால், ATA மீது தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மீஉயர் நீதிமன்றம் முடிவு செய்தது. தமிழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட 23ஆவது  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரான தனது கணவர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு நீதி கோரி 5,000 நாட்களை கடந்த போராட்டத்தை நினைவுகூரும் வகையில் ஆர்வலர் சந்தியா எக்னெலிகொட நினைவு கண்காட்சி ஒன்றை நடத்தினார். 1987இல் இந்திய அமைதிப்படையினரால் (IPKF) ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் மக்களைக் கொன்ற கொக்குவில் பிறம்பாடி படுகொலையின் 36ஆவது

ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் இன்னும் தண்டனையின்றி உள்ளன. முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் அரச நிதியின்மையின் காரணமாக விரைவில் ஆரம்பிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்மைத் தவறான முறையில் கைது செய்து தடுத்து வைத்தமைக்கு காரணமான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் இழப்பீடு கோரி கோரிக்கை கடிதம் ஒன்றை ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர அனுப்பியுள்ளார். அநியாயமாக கைது செய்யப்பட்டு 120 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு, சட்ட வழக்கை எதிர்கொண்ட எழுத்தாளர் சக்திகா சத்குமாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு அடுத்த வருடம் ஜூன் மாதம் 7 அன்று வாதங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.17.85 மில்லியன் கொண்ட தொகை தொடர்பில் ஆதாரங்கள் இல்லாததால் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்  இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றை போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் இரத்துச் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இரட்டைக் குடியுரிமையின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர் எனப் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேயின் குடியுரிமை தொடர்பான வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரிக்கப்பட்ட தீர்மானமொன்றில் தள்ளுபடி செய்தது.

முழு அறிக்கையையும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை: சர்வதேச புகைப்பட ஊடகவியலாளர் ஒருவரை இரணைதீவிற்குள் பிரவேசிக்க இலங்கை இராணுவம் மறுத்துள்ளது. அரசாங்க அமைச்சர் ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பில், நெத் எப்.எம் செய்திப் பிரிவின் தலைவர் உட்பட நான்கு ஊடகவியலாளர்கள் பாராளுமன்றச் சிறப்புரிமைக் குழுவினால் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். ஜனாதிபதியை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி, அதன் பிரதான நாளிதழ் ஒன்றின் ஆசிரியர் ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை அரசாங்கத்திற்குச் சொந்தமான அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒஃப் சிலோன் லிமிடெட் (ANCL) பத்திரிகையின் நிர்வாகம் ஆரம்பித்துள்ளது. மட்டக்களப்பில்  கால்நடைப் பண்ணையாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தைக் கலைக்கும் போது இடம்பெற்ற பொலிஸ் வன்முறைகள் தொடர்பாக செய்தி வெளியிட்ட இரு தமிழ் ஊடகவியலாளர்களிடம் பொலிஸாரால் 2 மணித்தியாலங்களுக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது

வட மாகாணத்தில் உள்ள இரணைதீவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட புகைப்பட ஊடகவியலாளரின் ட்வீட். புகைப்பட உபயம்: Elke Scholiers

ஒன்று கூடும் சுதந்திரத்தை நசுக்குதல்: முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.சவரணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி வட மாகாணத்தில் சட்டத்தரணிகள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தைப் பொலிஸ் அலுவலர்கள் புகைப்படம் எடுத்தனர். கால்நடைப் பண்ணையாளர்களிலான போராட்டமொன்றைப் பொலிஸார்   அவர்களை உடல்ரீதியாக தாக்கி கலைத்தனர். மட்டக்களப்பில் தமது பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களுக்குள் பிறரால் காணி அத்துமீறலுக்கு எதிராக தொடர்ச்சியாக 24 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கால்நடைப் பண்ணையாளர்களைக் கொண்ட குழுவிற்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையிலுள்ள அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தமிழ் குடும்பங்​ளைச் சேர்ந்த  குழு ஒன்று ஒருமைப்பாட்டில் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த போது, மட்டக்களப்பில் தடுத்து நிறுத்தி சுமார் 3 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவிடாமல் தடுக்கப்பட்டனர். திருகோணமலை பிரதேசத்தில் புதிய பௌத்த விகாரை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேருக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பல ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இணைந்து கொழும்பில் நடத்திய ஒரு போராட்டம் மற்றும் கண்டியிலும் மற்றும் கொழும்பிலும் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இரு போராட்டங்கள் ஆகியன மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

ஒக்ரோபர் 8 அன்று மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்களாலும் மற்றும் ஏனைய ஆர்வலர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தைப் பொலிஸார் விகிதசமமல்லாத பலத்தைப் பயன்படுத்தி கலைத்தனர். உபயம்: தமிழ் கார்டியன்

அடக்குமுறைச் சட்ட மற்றும் கொள்கை நடவடிக்கைகள்: நாட்டில் தொடர்ந்தும் இராணுவமயமாவதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜனாதிபதியினால் ஆயுதப்படைகளுக்கு அழைப்பு விடுக்கும் மாதாந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. பெற்றோலிய மற்றும் மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தடுக்க இத்தகைய அறிவிப்புகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. 2022 ஏப்ரலில் இலங்கை மக்கள் போராட்டத்தின் போது, சப்ரகமுவ மாகாணத்தில் ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் அலுவலர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவைக் கண்டித்து, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு கடிதம் ஒன்றை தேசியப் பாதுகாப்பு மீதான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு சமர்ப்பித்தது ஊடகங்களிடம் பேசியது.   

அரச அதிகாரிகளின் அடக்குமுறை: பொதுப் பயன்பாட்டுக் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்க மறுத்தமை உள்ளிட்ட பல விடயங்களில் அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததை அடுத்து, 2023 மே மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு மரண அச்சுறுத்தல்​ தொலைபேசி அழைப்பொன்று விடுக்கப்பட்டதுடன், கப்பமும் கோரப்பட்டது.

முழு அறிக்கையையும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.


[1] https://www.inform.lk/wp-content/uploads/2023/11/RoD_Sep23.pdf

[2] https://www.supremecourt.lk/images/documents/dailycourtlist2022/20.10.2023_2.pdf 

[3] https://www.adaderana.lk/news/94201/sc-decides-not-to-take-up-petitions-challenging-anti-terrorism-bill

[4] https://english.theleader.lk/news/6141-ekneligoda-s-wife-surpasses-5-000-days-in-her-search-for-justice

[5] https://english.theleader.lk/news/6119-without-funding-excavations-at-kokkutuduvai-gravesite-remain-in-suspense

[6] https://www.newsfirst.lk/2023/10/04/cabraal-and-lalith-released-from-zuberi-case/

[7] https://www.dailynews.lk/2023/11/01/admin-catagories/breaking-news/201921/ca-dismisses-diana-gamages-citizenship-case/

[8] https://twitter.com/ndilruksha/status/1710210706224922972/

Comments

Comments are closed.

Popular Posts

Login/Sign up